புதுடில்லி: அமெரிக்க, ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையில் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் ஈரான் தளபதி சுலைமானி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் உலகம் முழுவதும் ஒரு பதட்டம் ஏற்பட்டது. அமெரிக்கா, ஆள் இல்லா விமானத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிகழ்வை தொடர்ந்து இந்தியாவில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். குறிப்பாக வான்வழி கண்காணிப்பு படையினருக்கு சிறப்பு யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு நடவடிக்கையாக ஆள் இல்லா டுரோன்கள் வைத்திருக்கும் தனியார் நபர்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இவர்கள் விவரத்தை சேகரிக்கவும், மேலும் இதில் டுரோன்கள் மத்திய விமான துறையிடம் அரசிடம் பதிய வேண்டும் என்ற புதிய நிபந்தனைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.